பொய் உண்மையாக வேண்டும்
உண்மைத் துறந்து கூறுகிறேன்
மறந்து பிதற்றுகிறேன்!
வேண்டுமென்றே சண்டையிடுகிறேன். ஊடல்
வேண்டுமென்பதற்காக- உன் பார்வை
தீண்டும்போதெல்லாம்,
ஊடல் கொண்டு நட்பைக்
கொன்று காதலுக்கு
உயிர்கொடுக்கிறேன்.
கொடுக்கும் உயிர்ப்பிச்சையை
துச்சமென எண்ணி நட்பின்
உச்சத்தில் நிற்கிறாய் நீ!
அனுதினமும் நட்பைக் கொல்வதால்
ஆகிறேன் தொடர்கொலைகாரன்
அவளென் தோழி - பிடித்த பொய்...!
அரை நொடி வாழ்க்கை
உன் கண்கள் என் கண்களை
இப்படி அரைநொடியில்
எனக்கு ஒரு புதுவாழ்க்கை
பிறந்தும் இறந்தும்விடுகிறது.
இந்த அரைநொடி வாழ்க்கைக்காக
தினமும் வாழ்ந்து ஒழிகிறேன்.
சந்திக்கும் அந்த அரைநொடியில்
சொல்லிவிடுகிறது - ஆயிரம்
அர்த்தங்களை, செய்திகளை!
மிகச்சொற்ப நேரம்தான்
நானுன்னைப் பார்ப்பது - ஆறு
மணிநேரமாய் அலைபேசியில் கேட்டுப்
புரியாததையும் எனக்கு புரியவைத்துவிடுகிறது
அந்த அரைநொடிப் பார்வை.
"பார்க்கமாட்டேன் போ" என்று சொல்லும் கண்கள்,
ஒருதடவையேனும் என்னைப் பார்த்துவிடுகிறது
நான் பார்க்கிறேனா என்று பார்க்க!
-இவ்வரிகள் நம் இருவருக்கும் பொதுவானது.
உன் பார்வை கிடைப்பதற்கு
நாள்முழுதும் காத்துக்கிடக்கும் நான்,
அச்சொற்ப சந்திப்பின் அரைநொடியில்
முழுவதுமாய் காத்துக்கிடக்கும் உலகம்,
நமக்காக!
இப்படி அரைநொடியில்
எனக்கு ஒரு புதுவாழ்க்கை
பிறந்தும் இறந்தும்விடுகிறது.
இந்த அரைநொடி வாழ்க்கைக்காக
தினமும் வாழ்ந்து ஒழிகிறேன்.
வீட்டை விட்டு...
அம்மாவின் உணவையும் திட்டையும் “மிஸ்” பண்றவங்களுக்கும், ஹாஸ்டலில் மட்டமான உணவை அனுதினமும் உண்டு அவஸ்தைப்படுவர்களுக்கும், சொந்த ஊரை விட்டு வேறு ஊர் சென்று படிப்பவர்களுக்கும், என் சக பள்ளித்தோழர்களுக்கும், மேலும், இன்னபிற ஜீவராசிகளுக்கும் இந்த கட்டுரையை சமர்ப்பிக்கிறேன்.
"டே, கண்ணு எந்திரிடா... மணி என்ன ஆகுது?" ; - என்ற பாசத்தோடு பள்ளியெழுப்பிவிடுவதும்,
"டே, கண்ணு எந்திரிடா... மணி என்ன ஆகுது?" ; - என்ற பாசத்தோடு பள்ளியெழுப்பிவிடுவதும்,
"சனியனே, எந்திரிச்சி தொல!" ; என்று அதைவிட அதீத பாசத்தோடு நம் துயிலையெழுப்புவதும்
"அதான், பையன் தூங்கறான்ல, விடுங்க இன்னும் கொஞ்ச நேரம் தூங்கட்டும்"; என்று நம் உள்ளமறிந்து உறங்கவிடுவதும்,
காதாற கேட்டு சரியாக இரண்டாண்டுகளாகிறது...!
இரண்டு வருடங்களுக்கு முன், காலையிலெழுந்தவுடன் பெட் காபி, அல்லது பெட் டீ. பின் சுடச்சுட இட்டிலியோ தோசையோ, வாரவிடுமுறையானால் பூரியோ பொங்கலோ அம்மாவின் கைவண்ணத்தில் டைனிங் டேபிளில் ஆவி பறக்க காத்துக்கொண்டிருக்கும். எண்ணிக்கையில் ஓரிரு தோசையோ, இட்டிலியோ குறைவாக உண்டுவிட்டால்....
"ஏன்டா?" (அ) "ஏன்டீ?" என்ன ஆச்சு உனக்கு?
"போதும்மா"
"என்னது? போ போ, உனக்கெல்லாம் அடுத்த வருஷம் காலேஜ் மெஸ்ல காய்ஞ்ச தோசையும், வேகாத இட்டிலியும் தின்னாதான் புத்திவரும்"
என்று, அடுத்த வருடத்தைப் பற்றி ஆரூடம் கூறும் அம்மாக்கள் இங்கே அநேகம். ஆனால் இன்றோ கல்லூரியில் சூப்பரான / சுமாரான / மட்டமான / மகாமட்டமான (நான்கில் உங்கள் ஹாஸ்டல் சாப்பாடு எப்படியோ, அதற்கேற்றவாறு படிக்கவும்) உணவை உண்கிறோமா இல்லையா என்று நம்மை விசாரிக்கக் கூட ஆளில்லை.
பனிரெண்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்களைப் பொறுத்தவரை, சென்னையிலோ கோயம்பத்தூரிலோ, அல்லது வேறு எதாவது மாநகரில் போய் படிக்கவேண்டும் என்பதே பிரதான குறிக்கோளாக இருந்திருக்கவேண்டும். எனக்கும் அப்படித்தான் இருந்தது. உங்களுக்கும் அப்படியே என் நம்புகிறேன். கல்லூரிக்கு சேர்ந்த புதிதில், புதிய ஊர், புதிய மனிதர்கள், புதிய நண்பர்கள், ஹாஸ்டல் வாழ்க்கை என கிட்டத்தட்ட அனைத்துமே புதிதாக இருக்கும். புதுப்பொண்டாட்டி போல், முதல் ஓரிரு மாதங்களுக்கு ஜம்மென்று நல்ல அனுபவமாக இருப்பதால் வீட்டின் அருமை நமக்கு தெரியவோ அல்லது புரியவோ போவதில்லை. நாட்கள் செல்ல செல்ல நம்மில் பலருக்கு "ஒழுங்காக சொந்த ஊரிலே எதாவது ஒரு கல்லூரியில் டே ஸ்காலராக இருந்திருக்கலாமே" என நினைக்கத்தோன்றும்.
சரி அதுபோகட்டும், ஹாஸ்டல் வாசிகளைப் பற்றி கொஞ்சம் ஆராய்வோம். சொந்த ஊருக்கு சற்று பக்கத்திலே கல்லூரி அமையப்பெற்றவர்களுக்கு பிரச்சினை இல்லை. மாதாமாதம் சென்று வருவார்கள். கொஞ்சம் தூரமாக இருந்தால் தீபாவளிக்கோ, பொங்கலுக்கோ, செமஸ்டர் விடுமுறைக்கோதான் செல்லமுடியும். அவ்வாறு உங்கள் ஊர் தூரமாக இருந்தால் உங்களுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள் என்றும் உண்டு! என்னதான் ஹாஸ்டல் மெஸ்ஸில் பத்து பதினைந்து நண்பர்களோடு இல்லாத சேட்டை செய்து சாப்பிட்டாலும், அம்மாவின் அன்பில் தயாரான உணவை, அவளின் திட்டோடு சேர்த்து சாப்பிடும் சுகமே தனி.
என்றாவது ஒரு நாளாவது மெஸ்ஸில் போடும் தோசையோ சப்பாத்தியோ நன்றாக இருக்கும் என்று நீங்கள் எதிர்பார்த்திருப்பீர்கள், ஆனால் அன்றும் கேவலாமாக இருந்து, பிளாஷ்பேக்கில் உப்பு காரம் குறைவு என்று அம்மாவைத்திட்டி சாப்பிட்டது உங்கள் ஞாபகத்திற்கு வரும். அவ்வாறு என்றேனும் உங்களுக்கு ஞாபகத்திற்கு வீட்டு சாப்பாடின் அருமை தெரியவந்திருந்தால் மறுபடியும் என்னுடைய ஆழ்ந்த அனுதாபத்தைப் பதிவுசெய்துகொள்கிறேன்.
ஆனால் ஒரு விஷயத்தை நினைத்து நீங்கள் பெருமைப் பட்டுக்கொள்ளலாம். இரண்டு மூன்று மாதம் கழித்து வீட்டிற்கு சென்றால் உங்களுக்கு கிடைக்கும் மரியாதையே தனிதான். அசைவம் என்றால் சிக்கனோ, மட்டனோ, மீனோ நாவில் எச்சில் ஊற உண்டுகளிக்கலாம். சைவம் என்றால், உங்களுக்கு பிடித்த ஐட்டம் எதுவோ அது அபரிவிதமாக கிடைக்கும். பாவம் புள்ள ரெண்டு மாசம் கழிச்சி வீட்டுக்கு வந்திருக்கு, என்று ஏறத்தாழ அனைவருக்கும் ஏகபோக வரவேற்புதான்.
மேலும் இன்னொரு பிரச்சினையும் உண்டு, அடிக்கடி வீட்டிற்கு சென்றுவந்தால் மரியாதை அவ்வளவாக கிடைக்காது. புதுமாப்பிள்ளை மாமனார் வீட்டிற்கு சென்றுவருவதுபோல் "அப்பப்ப போய்வரவேண்டும்"
இதில் மிகவும் பரிதாபத்துக்குரிய ஜீவராசிகள் யாரென்றால், ஆர்வக்கோளாரில் வெளியே ரூம் எடுத்து தங்கியவர்கள் தான். வெளியே தங்குபவர்களின் பலரின் வாழ்க்கை சோகத்தில் தான் உழல்கிறது. எனக்கு தெரிந்து வெளியே ரூம் எடுத்து தங்கியவர்கள் பலர் சாப்பாட்டை சாக்கு காட்டி ஹாஸ்டலை விட்டு வெளியேறியவர்கள். வெளியே ரூம் எடுத்து தங்கியவர்கள் முக்கால்வாசிபேர் "சோத்துக்கு செத்துப்போனவர்களாகதான்" காட்சியளிக்கின்றனர். பலர் ஃபேமிலி மேன்-ஆக ஆகிவிடுகின்றனர். சரியான போஷாக்கு கிடைக்கவில்லையோ என்னவோ? சென்றவாரம் வெளியே ரூம் எடுத்து தங்கிய நண்பன் சற்று சோகமாக காணப்பட்டான், என்னடா என்று அவனை விசாரித்ததில்,
"இல்ல மாமா, தேதி ஒன்னாகிடுச்சி, கரண்டு பில்லு கட்டணும், போன மாசமே வாடக பாக்கி இருக்கு, இன்னும் ரெண்டு மூனு நாளுல கேஸ் சிலிண்டர் வேற தீந்து போய்டும்"
என்று சினிமாக்களில் வரும் மிடில் கிளாஸ் அம்மாக்களைப் போல பஞ்சப்பாட்டு பாடிக்கொண்டிருந்தான் அந்த ஃபேமிலி மேன். ஹாஸ்டலில் இருந்தால் உணவு சுவையாக இருக்கிறதோ இல்லையோ மணியடித்தால் சோறு என்பதுபோல் வேளாவேளைக்கு தின்ன எதாவது கிடைத்துவிடும், வெளியே ரூம் எடுத்தால் அது கொஞ்சம் கஷ்டம் தான் என்று அப்ரூவர் ஆனார் அந்த ஃபேமிலி மனிதர்.
வெளியே ரூம் எடுத்து வெற்றி கண்டவர்களின் கதையும் உண்டு. வெளியே ரூம் எடுத்தால் தண்ணி, தம் என்று எதுவேண்டுமானாலும் எப்போதுவேண்டுமானாலும் அடிக்கலாம். அந்தமாதிரி பழக்கம் இல்லாதவர்களும் கூட வெளியே ரூம் எடுத்து சந்தோஷிகளாக உலா வருகின்றனர். அது சரி, அவரவருக்கு அவரவர் வாழும் இடமே சரியாகப்படும்.
எங்கு தங்கினால் என்ன? சொந்த ஊரில் ஏறத்தாழ அனைவரும் ராஜாக்களைப் போல், ராணிகளைப் போல் வாழ்ந்திருப்பீர்கள். இப்போதும் அதே மாதிரி “ஜம்”மென்று வாழ்கிறீர்கள் என்றால் என் பாராட்டு நிச்சயம் உங்களுக்கு உண்டு. இல்லையென்றால் என் அனுதாபமும் உண்டு.
வீட்டைவிட்டு வெளியூர் சென்று படிக்கும் நாம் இந்த இரண்டு வருடங்களில் வாழ்வின் அர்த்தத்தை புரிந்துகொண்டிருப்போம். ஞானம், போதனை, அறிவு, தெளிவு என அனைத்தும் கிடைக்கப்பெற்றோம். இனி நம் வாழ்க்கையை நோக்கி பயணிப்போம்.
இக்கட்டுரையைப் படிக்கையில், எங்கேனும் உங்களுக்கு உங்கள் அம்மா/அப்பா ஞாபகம் வந்திருந்தால், சொந்த ஊர் ஞாபகம் வந்திருந்தால், அதுவே எனக்கு போதும்…
தூக்கில் தொங்கிய தோடு!
நகைக் கடையில்
கண்ணாடிப் பேழையினுள்
கர்வத்துடன் கேட்டது "ஒரு தோடு"
என்னை அணிய
எவளுக்கு உள்ளது பேறு?
யாரேனும் கூறு!
காண்பது ரோஜாப்பூவின்
மடல்களோ? காவிரித்தாயின்
வளைவுகளோ? மயில்தோகையின்
சுற்றல்களோ?
-குழம்பியது அது!
அவளின் காதின் சிவந்த
பவள வளைவுகளில் தன்
கர்வத்தைத் தொலைத்தது "அந்த தோடு"
தன் கர்வத்தைக் கொன்றவளைத்
தொட, அவளின் காதுமடல்களில்
தூக்குமாட்டிக்கொண்டது "அந்த தோடு".
கண்ணாடிப் பேழையினுள்
கர்வத்துடன் கேட்டது "ஒரு தோடு"
என்னை அணிய
எவளுக்கு உள்ளது பேறு?
யாரேனும் கூறு!
காண்பது ரோஜாப்பூவின்
மடல்களோ? காவிரித்தாயின்
வளைவுகளோ? மயில்தோகையின்
சுற்றல்களோ?
-குழம்பியது அது!
அவளின் காதின் சிவந்த
பவள வளைவுகளில் தன்
கர்வத்தைத் தொலைத்தது "அந்த தோடு"
தன் கர்வத்தைக் கொன்றவளைத்
தொட, அவளின் காதுமடல்களில்
தூக்குமாட்டிக்கொண்டது "அந்த தோடு".
அடியேய், தமிழே!
ரெண்டா யிரமாண்டுகளுக்குமுற் பட்டவளே - உயிரு
முடலும் இணைத்து உலகினுக்கே உருவெடுத்தவளே
உண்டோடி நின்கவி னுக்கோரீடு - நுரையுங்
கடலும் போலுயிரில் இரண்டறக்கலந்தவளே -நின்னுருவங்
கண்டோ, நித்தமும் பிறவிப்பயனெய்துகிறேன் - வெறும்
மடலும் கவியும் இயலு மிசையும்
கொண்டா வுனைத் துதிக்கிறேன்? என்னுயிரிழைத்து
அனுதினமு முனை தொழுது நிற்கிறேன்!

நல்பெற்றோளை பெற்றேனே!
எம்மை ஈன்றெடுத்த கண்ணறி தெய்வமே,
வறண்ட பூமிக்கோர் கூர்மேகமென எனக்கே
உம்மை பொழிந்தாயே! கடுங்குளிரென அன்று
இருண்ட என்வாழ்வில் நீ தேவதையாய்
வெம்மைச் சுடரேந்தி சுகமாய் அரவணைத்தாயே
ஆயிர மாயிரம் உறவுகள் கூடினும் இச்
செம்மை யினளுக்கோர் ஈடிணையில்லையே- இனி
என் காலமுழுதும் உன் காலடிக்கே!
ஏட்டில் இல்லாப் பாடத்தைக் கொணர்ந்தவள்
எந்தாய், பசித்த போது எனக்கென
ஊட்டிய ஒருவாய் சுடுசோறைப்போலும்- ஐந்தகவையில்
பாசத்தோடு என் மானங்காக்க
மாட்டிய அரைக்கால் சட்டையைப்போலும்- புகழ்வது
புறமெனவறிந்தும் புன்முறுவலோடு கேட்பதைப்போலும்-நீ
காட்டிய தந்தையைப் போலும்- இவ்வுலகில்
நானறிந்த சிறந்தது வேறொன்று மில்லையே!
வறண்ட பூமிக்கோர் கூர்மேகமென எனக்கே
உம்மை பொழிந்தாயே! கடுங்குளிரென அன்று
இருண்ட என்வாழ்வில் நீ தேவதையாய்
வெம்மைச் சுடரேந்தி சுகமாய் அரவணைத்தாயே
ஆயிர மாயிரம் உறவுகள் கூடினும் இச்செம்மை யினளுக்கோர் ஈடிணையில்லையே- இனி
என் காலமுழுதும் உன் காலடிக்கே!
ஏட்டில் இல்லாப் பாடத்தைக் கொணர்ந்தவள்
எந்தாய், பசித்த போது எனக்கென
ஊட்டிய ஒருவாய் சுடுசோறைப்போலும்- ஐந்தகவையில்
பாசத்தோடு என் மானங்காக்க
மாட்டிய அரைக்கால் சட்டையைப்போலும்- புகழ்வது
புறமெனவறிந்தும் புன்முறுவலோடு கேட்பதைப்போலும்-நீ
காட்டிய தந்தையைப் போலும்- இவ்வுலகில்
நானறிந்த சிறந்தது வேறொன்று மில்லையே!
"மன்னித்துவிடு"
வெருமனே,
பழகிப் பழகி புளித்துவிட்டது என்றெண்ணினேனோ-உன்னை
அழவைத்துப் களித்தாகவேண்டுமென எண்ணினேனோ-அடை
மழையில் சுடும் சூரியனைப் போன்று
ஒப்பிலா செயல் செய்தேனோ,
தப்பென்று தெரியாது தோழி-உன் வாழ்வில்
எப்படியும் மறக்கமாட்டாய் என்றெண்ணிதானே
உன்னிடம் சண்டையிட்டேன்- அழுத
கண்ணிரெண்டை பார்த்து நடந்ததை
எண்ணி கூறுகிறேன், என்னை
மன்னித்துவிடு!
சிந்தை முழுதும் எந்தை....
நொந்தே மனம் வெதும்புகிறேன் - என்னறிவுச்
சுடரைக் காற்றனைத்ததே - ஞாலந்தந்தே காலஞ்சென்றனன் - என்னருமைத்
தொடரப் பேறில்லையே! நின்னையறிந்து
சிந்தையிற் செதுக்குமுன் சென்றாயே - கூற்றவன்
இடறி யிழுத்தானோ, கூறு? யான்பெற்ற
எந்தையே, என்றும் சிந்தைமுழு துமுனை
படற வைத்தேத் தொழுவேன்!
தமிழகத்தின் கல்விக்கடைகள்
இன்றும் கூட எங்கள் கிராமத்தில், ஊர்த் தலைவரைவிட, துவக்கப்பள்ளி தலைமையாசிரியரையே ஊர்மக்கள் பெரிதும் மதிக்கின்றனர். இன்று நகரங்களில் ஆசிரியர்களுக்கு மதிப்பளிக்கப்படுகிறதா என்று எனக்கு தெரியவில்லை. பல்லாவரத்தில், போன வாரம் ஒரு பள்ளியின் ஆசிரியர் ஹெல்மட் போடாமல் வண்டி ஓட்டி காவல்துறையிடம் சிக்கவே, அவரை அலேக்காக அமுக்கி கர கர வென்று கரந்துவிட்டனர். ஆசிரியரும் கொஞ்சம் "அமுத்தலாக" பேசவே, போலிஸ்காரர் கடுப்பாகிப்போனார். பின்பு, தான் செய்த தவறிலிருந்து தப்பிப்பதற்காக பிரம்மாஸ்த்திரமான "தான் ஒரு பள்ளியின் ஆசிரியர்" என்பதை பிரயோகப்படுத்தினார். ஆனால் முறுக்கு மீசையோ "என்னடா பெரிய வாத்தி? நாம்பாக்காத வாத்தியா?" என்று ஏகவசனத்தில் பேசினார். வாத்தியார்களெல்லாம் எப்படிப்பட்டவர்கள் என்ற தனது தனிப்பட்ட கருத்தையே, பெரும்பாலானவர்களின் பண்பு என்று முடிவுசெய்துவிட்டார். முறுக்குமீசையின் அந்த பண்பைப்பற்றிய பேச்சுக்கு பக்கத்தில் இருப்பவர்கள், ஆமாஞ்சாமி போட்டனர். கடைசியில் கூனிக்குறுகி அந்த ஆசிரியர் ஃபைன் கட்டிவிட்டு, வசைவாங்கிவிட்டு சென்றார். என்ன ஆச்சோ, ஆசிரியரின் அரும்பணியை இவர்கள் "வாத்திவேலையாகவே" பார்க்கின்றனர்.
எங்கள் வகுப்பில் புதிதாக ஒரு ஆசிரியர் ஒருவரை வேலைக்கு அப்பாய்ண்ட் செய்திருந்தனர். வந்ததும் வராததுமாய், நிறைய வியாக்யானங்கள், விதண்டாவாதங்கள் பேசினார். "என் வேலை இந்த சிலபஸ்ஸ முடிக்கணும். அவ்ளோதான், நீங்க கவனிக்கறீங்களா, இல்லையான்னு பாக்கறது என்னோட வேலை இல்ல. நா அதுக்கு சம்பளமும் வாங்கல. நாம்பாட்டுக்கு வருவேன், கிளாஸ் எடுப்பேன், போய்கிட்டே இருப்பேன்." என்று பேசினார். என் நண்பர்களோ, "மச்சி, இவருதாண்டா உண்மையான காலேஜ் புரபசர்". என்றெல்லாம் புகழ்ந்தனர். காரணம், அவர் எதைப்பற்றியும் கண்டுகொள்வதில்லை. வந்தோமா, பாடம் எடுத்தோமா என்றிருக்கிறார். மாறாக, எனது நெருங்கிய நண்பன் ஒருத்தன் இதை முற்றிலும் எதிர்த்தான். "இவரு எல்லாம் teaching professionனுக்கே சரிபட்டு வர மாட்டார். நீ வேணும்னா பாரேன், இன்னும் ஒரே மாசத்துல இந்த ஆள டிஸ்மிஸ் பண்ணிடுவாங்க" என்றான். என்னைப்பொருத்தவரை அவரைத் தப்புசொல்லி ஒன்றும் பயனில்லை. காரணம், மாணவர்களுக்கு பாடம் எடுப்பதை ஒரு சம்பளம் வாங்கும் வேலையாகத் தான் பார்க்கிறார். அவரைப்பொருத்தவரைக்கும் தினமும் இரண்டு மணிநேரம் தான் மனப்பாடம் செய்ததை ஒப்பிக்கவேண்டும். மாதம்பிறந்தால், உழைத்த உழைப்பிற்கு கூலிவாங்கவேண்டும். அவ்வுளவுதான். எனக்கு அந்த வாத்தியார் மீது கோபமில்லை, அவரைப் பிடித்துபோகவுமில்லை. அவர் அப்படி மாறக் காரணமான சமூகத்தின் மீதுதான் கொஞ்சம் கோபமும் வருத்தமும் பட முடிந்தது.
எனது நண்பனின் அண்ணனை " B.E முடிச்சிட்ட, அடுத்து என்ன?" எனக்கேட்டபோது. "ஒன்னும் வேல கெடைக்கற மாதிரி தெரியல, இன்னும் ரெண்டு வருஷம்தான், M.E முடிச்சிட்டு ஏதாவது காலேஜ்ல லெக்சரரா ஜாய்ன் பண்ணப் போறேன்." என்றார். தலையில் அடித்துக்கொண்டேன். இந்த அளவுக்கு நம் கல்விமுறை தரங்கெட்டு போய் இருப்பதற்கான காரணம் பற்றி எனக்கு தெரியவில்லை அந்த காரணத்தைப்பற்றியும் நான் அலசப்போவது இல்லை. நான் அதற்கு அருகதையானவன் இல்லையோ என்னமோ? ஒரு விடயம் சரியாக இல்லாதபோதும், அது சரியில்லை என எனக்கும் தெரிந்தபோதும், ஏனோ அது சரிதான் என்று உருவகம் செய்து அதையே பின்பற்றிவிட்டு அதைப்பற்றியே எப்படி என்னால் அவதூறாக பேச இயலும்? சரி இது ஒருபுறமிருக்கட்டும்.
விலைவாசி ஏறுகிறது. கல்விக்கடைகளிலும் இன்று கல்வியின் விலை ஏறிக்கொண்டே செல்கிறது, கட்டுப்படுத்தவே முடிவதில்லை. பணம்படைத்தவருக்கு மட்டுமே இன்று தரமான கல்வி கிடைக்கிறது. இன்று தமிழ்நாட்டில் ஒரு சராசரி மாணவன் பொறியியலை காசுகொடுத்து வாங்க குறைந்தபட்சம் 3 இலட்ச ரூபாய் தேவைப்படுகிறது. பல இரண்டாம் தர கல்லூரிக்கடைகளில் குறைந்தது 4 இலட்சம் ஆகிறது. நம்மில் பலரில் நான்காம் ஆண்டில்தான் "அஹா, இவ்வுளவு செலவு ஆகுமென தெரிந்திருந்தால், மூடுவிட்டு ஒழுங்காக சுயதொழில் செய்திருக்கலாமே" என்று ஞானோதயம் பிறக்கிறது! போதாக்குறைக்கு வெளிநாட்டுக்கல்லூரிக் கடைகளின் கிளைகளை இங்கே திறப்பதற்கு மசோதா ஒன்றும் தயாராகிக்கொண்டு இருக்கிறதாம். மசோதா மட்டும் இயக்கப்பெற்றால், என்னென்ன நன்மைகள் வருமென எனக்கு தெரியாது. மாறாக உள்ளூர் வியாபாரிகள் பாதிக்கப்படுவர். வெளிநாட்டு வியாபாரிகளிடம் இருக்கும் சரக்குகளைத் தாமும் தமது கடைகளில் வாங்கிப்போட்டு கல்வியின் விலையினை ஏற்றிவிடுவர். பாதிக்கப்படுவது என்னமோ, மிடில் கிளாஸ் மாதவன்களின் பிள்ளைகள் தான். அடித்தட்டு மக்களுக்கு இன்னமும் கல்வி என்பது சூப்பர் மார்கெட்டில் கிடைக்கும் உயர்ரக வாசனைத் திரவியமாகத்தான் உள்ளது!
இதை இத்துடன் முடித்துக்கொள்ளலாம் என நினைக்கிறேன். இதைப் பற்றி நண்பனிடம் பேசியபோது, அவன் இதற்கு முழுமுதற்காரணம் என உலகமயமாக்கலைத்தான் சொன்னான்.
1886-இல் பாரதி, தனது 14ஆம் வயதில் எட்டையபுர மன்னருக்கு இவ்வாறு கடிதமொன்றை எழுதினார். அதில் ஒரு பகுதி.
பாரதிக்கு உதவிகிடைத்ததாக எனக்கு தெரியவில்லை. ஒருவேளை அவருக்கு உதவி கிடைத்திருந்தால், அதுபோன்று மன்னர்கள் இன்றும் இருந்திருந்தால், இந்த கட்டுரையை நான் எழுத அவசியம் நேர்ந்திருக்காது!

......இன்தமிழ் கற்பினோ,
பின்னை ஒருவரும் பேணார், ஆதலின்
கன்ன, யான் இம்மொழி கற்கத் துணிந்தனன்!
எனினும்,
கைப்பொருள் அற்றான் கற்பது எவ்வகை?
பொருளால் அன்றிக் கல்வியும் வரவில
கல்வியால் அன்றிப் பொருளும் வரவில.....
தமிழ்க் கற்றால், ஒரு மதிப்பும் இல்லை. எனவே தான் ஆங்கிலம் கற்கிறேன். ஆயினும் ஆங்கிலமேயானாலும், பணமின்றி எவ்வாறு பயிலமுடியும்? பணமின்றி கல்வியும் கிடைக்கவில்லை, கல்வியின் துணையின்றி பணமும் கிடைக்கவில்லை. எனவே, தாங்கள் எனக்கு உதவி செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
பாரதிக்கு உதவிகிடைத்ததாக எனக்கு தெரியவில்லை. ஒருவேளை அவருக்கு உதவி கிடைத்திருந்தால், அதுபோன்று மன்னர்கள் இன்றும் இருந்திருந்தால், இந்த கட்டுரையை நான் எழுத அவசியம் நேர்ந்திருக்காது!
தோழிக்கு கவிதை...
"லூசு"
தேர்வுக்கு படிக்காதபோதும்,
ஆர்வமுடன் அவளை விட்டு படித்தபோதும்,
கல்லூரிக்கு காலதாமதம் ஆனதும்-பேசிய
சொல்லும் செயலும் வேறானபோதும்,
குண்டு என கேலிசெய்த போதும்- போன
ஆண்டு பிறந்தநாளை மறந்தபோதும்-அவள்
உண்டு உண்டு உருபெருத்த போதும்- அதைக்
கண்டு நான் நகைத்தபோதும்- சென்ற
வாரம் அவளிடம் பகைத்தபோதும்-கா
தோரம் 'தோடு', ரசித்து சிரித்தபோதும்,
கல்லூரியில் அழகாக உடை உடுத்தாதபோதும்,
செல்பேசியில் அழைப்பை எடுக்காத போதும்-சொன்ன
சொல்லை மழுப்பி அடுக்கிய பேச்சின் போதும்
என, எதற்கெடுத்தாலும் தோழியிடம்
வசை வாங்குவதுதான் என் பிழைப்பு!
அட, அதற்காக அவளளித்த இடுகுறிப்பெயர்
தான் இக்கிறுக்கலின் தலைப்பு!

முதல் கவிதை!!!
தோழியின் பிறந்தநாளுக்காக நான் எழுதிய முதல் ஒழுங்கான கவிதை.
சுட்டெரிக்கும் சித்திரையிலும் - நல் இரவில்
தொட்டுத் தொடரும் நித்திரையிலும்
தினந்தினம் காற்றடிக்கும் ஆடியிலும் - நல்ல
மனந்தனை ஏற்றிருக்கும் நண்பர்களூடும்
கார்மேகம் பொழியும் கார்த்திகை மழையிலும்- என்றும்
ஆர்வமின்றி கழியும் கல்லூரி நாட்களிலும்
பனிபோல் படர்ந்த மார்கழி மாலையிலும்- நனி மாங்
கனிபோல் இனிக்கும் எவ்வேளையிலும்
கள்ளங்கபடமில்லா நம்நட்பை மறக்கவில்லை,
உள்ளந்தோறும் மலரும் நினைவுகளையும் துறக்கவில்லை,
சொல்லும் செயலும் உன்னை புறக்கணித்ததுமில்லை,
எப்பொழுதேனும் தப்பிழைத்திருந்தால்
இப்பொழுதே மனத்தினின்று அழித்துவிடு.
அப்படியே இதையும் அகத்தில் எழுதிவிடு,
எனதருமைத் தோழியே,
மனது முழுதுமின்பமாய் -
நீங்காத நினைவுகளுடன்,
மங்காத மகிழ்ச்சியுடன் - இன்றுபோல்
நூறாண்டு வாழவேண்டும்- என்றுமே
மாறாத நட்பும் வேண்டும்.
ஆயிரம் கற்றபோதிலும்- ஆதலால்
வேலை பெற்றபோதிலும்,
உன்துணை ஏற்றபோதிலும்,
உற்ற நண்பனை
முற்றிலும் மறந்துவிடாதே!
நெஞ்சில் மாறா நட்புடன் "இரவிசங்கர்"
தமிழ்ப் புத்தாண்டு-யாரை கேட்டு மாற்றினீர்கள்?
முதலில் இவ்விஷயத்தில் எனக்கு அவ்வுளவாக ஈடுபாடு இல்லை. தமிழுக்கென்று தனி காலண்டர் இருப்பதில் ஒன்னும் மாற்றுக்கருத்து இல்லை. இருந்தாலும், தோழர் துரை சரவணன் அவர்கள், அவருடைய ஸ்டேட்டஸ் அப்டேட்டில் திருவள்ளுவர் ஆண்டே தமிழ் புத்தாண்டு என்று கூறினார். அதை பார்த்ததும், இந்த கட்டுரையை பதிந்தே ஆகவேண்டும் என்ற முடிவுக்கு வந்தேன். இது நல்ல சீர்திருத்தம் தான், இருப்பினும், ஆண்டாண்டு காலமாக கடைபிடித்து வரும் ஒரு பழமையான நாகரிகத்தின் வழக்கத்தை இப்படி பொசுக்கென்று மாற்றுவது ஏன்?
இவ்வாறு பேசுவது பழமைவாதித்துவம் என்று எண்ணவேண்டாம்!
ஒரு மாறுதலுக்கு, உண்ட பின் குளித்தால் நன்றாக இருக்குமா? அல்லது இடக்கையில் உண்டாலும் நன்றாக இருக்குமா? முற்றிலும் முற்றிய முற்போக்குவாதிகளுக்கு இதுவும் சரி என்று படலாம். ஆனால் சாமானிய மக்களுக்கு?
மனித நாகரிகம் தோன்றியது முதல் கொண்டாடப்படுகின்ற புத்தாண்டில் போயா சீர்திருத்தம் பண்ணுவது? ரத்தத்தில் ஊறிய தமிழ் வருடப்பிறப்பை மாற்றுவது என்பது சாதாரண காரியம் அல்ல! மேலும் இவ்வஷயத்தை ஏற்றுக்கொள்ள, தமிழ்நாடு முழுவதும் முற்போக்குவாதிகள் வசிக்கவில்லை!
எனது நண்பனிடம் இதைப்பற்றி கூறினேன். அவன், "போடா டேய், ஆங்கில காலண்டர்லே ஜனவரி ஒன்னு தான் நியு இயர், அதே மாதிரி ஜனவரி மாசத்துலே நாமளும் கொண்டாடலாம்" என்றான். அவசரமாக எங்கேயோ சென்று கொண்டிருந்த அவனை, அரை மணி நேரம் நிற்க வைத்து லெக்சர் கிளாஸ் எடுத்தேன். "நாம் அனைவரும் கொண்டாடுகிறோமே, ஆங்கிலப்புத்தாண்டு அது ஒன்னும் நாகரிக வழக்கம் இல்லை. 15 -ஆம் நூற்றாண்டில் எட்டாம் போப் கிரிகோரி தான் ஜனவரி ஒன்றிற்கு ஆங்கிலப்புத்தாண்டை மாற்றினார். அதற்கு முன் ஏப்ரல் ஒன்றே வருடப்பிறப்பாக இருந்தது. இந்த சீர்திருத்தத்தை அக்கால மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. எனவே, போப்பின் விசுவாசிகள் ஏப்ரல் ஒன்றாம் தேதி அன்று, அனைவருக்கும் போலியான பரிசுகளை கொடுத்து ஏமாற்றி கேலி செய்தனர். இதுவே காலப்போக்கில், April fools dayவாக மருவியது. விசித்திர ஆங்கிலேயர்கள் அதையும் கொண்டாடுகின்றனர் அவர்களைப்பார்த்து நாமளும் மற்றவர்களை ஏமாற்றி மகிழ்கிறோம்".
சாதாரண புத்தாண்டு தேதிதானே, எப்பொழுது கொண்டாடினால் என்ன? என்று கேட்காதீர்கள். தமிழனின் புத்தாண்டு திருவள்ளுவர் ஆண்டு தான் என்கிறீர்கள். வாஸ்தவம் தான். திருவள்ளுவர் தான் தமிழை கண்டுபிடித்தது போல், அவர் வாழ்ந்த காலத்தை பற்றிய காலண்டரையே பின்பற்றலாம் என்று சொல்லுவது தான் அபத்தம். அவரது காலம், கி.பி. மூன்றாம் நூற்றாண்டு எனக்கூறுகின்றனர். அதற்கு முன், தமிழே இருக்கவில்லையா? சரி, அதுபோகட்டும், இவ்வுலகில் இருந்து வந்த பழைய நாகரிகங்களில் பலவற்றில் புத்தாண்டு மார்ச் மாதம் கடைசி வாரத்திலோ, அல்லது ஏப்ரல் மாதம் முதல் வாரத்திலோ தான் கொண்டாடப்பட்டு வந்தது.
உதாரணமாக, 2012 இல் உலகம் அழியப்போகிறது என்று கூறிய ஆஸ்டெக் (Aztec) காலண்டரில் புத்தாண்டு மார்ச் இறுதி தான். இஸ்லாம் தோன்றிய மத்திய கிழக்கு நாடுகளிலிலும், பாரம்பரியம் மிக்க பாரசீகம் நாட்டிலும் ஏப்ரல் மாதம் தான் புத்தாண்டாக இருந்ததாக விக்கிபீடியா கூறுகிறது. கிருத்துவர்களும் மார்ச் இறுதியில் வருகின்ற Annunciation என்ற ஒரு விழாவைத்தான் வருடப்பிறப்பாக கொண்டாடினர் எனவும் செய்திகள் உண்டு. தாய்லாந்து நாட்டு மக்களும், பஹாய் மக்களும் கூட, ஏப்ரல் மாதம் தான் தங்களின் புத்தாண்டை கொண்டாடுகின்றனர். ஐரோப்பா கண்டத்தில் பழமையான நாகரிகம் கொண்ட ரோம் நாட்டிலும், மார்ச் மாதமே புத்தாண்டாக கொண்டாடினர்.
மேலும், நம் சித்திரைதிருநாள் வழக்கப்படி, அன்று உணவில், இனிப்பும் கசப்பும் சேர்த்துக்கொள்வது வழக்கம். மேலே கூறியுள்ள அனைத்து இனத்தவரும் இதே போல், இனிப்பு உணவை சேர்துக்கொண்டாடுகின்றனர்.
எனவே, ஏறத்தாழ உலகிலுள்ள அனைத்து பாரம்பரியம் மிக்க இனத்தவரும் Vernal Equinox எனப்படுகிற கால நிகழ்வுக்கு அடுத்து வருகின்ற வசந்தகாலத்தை (இளவேனிற் காலம்) தான் தங்களின் வருடப்பிறப்பாக கொண்டாடுகின்றனர். மனித நாகரிகம் தோன்றியது முதல் இருக்கின்ற வழக்கம் இது. சீர்திருத்தம் செய்கிறோம் என்ற பெயரில் இதையெல்லாமா மாற்றுவது? இதில் வருத்தபடுகிற விஷயம் என்னவென்றால், மேலே கூறியுள்ள அனைத்து இன மக்களும், இன்று கிரிகோரியன் காலண்டரை கடைபிடிக்க தொடங்கிவிட்டனர். இதனால், அவர்களின் அடையாளம் அழிந்துகொண்டு வருகிறது என்று தான் சொல்லவேண்டும். இந்தியாவின், குறிப்பாக தமிழ்நாட்டின் சிறப்பே அதன் பாரம்பர்யம் தானே! இதையும் மாற்றி விட்டால், அப்புறம் நமக்கென்று என்ன அடையாளம் மிஞ்சி உள்ளது?
மனித வாழ்வில் விழாக்கள் என்பது மொழி கடந்து, இனம் கடந்து கொண்டாடப்படுகின்ற சமாசாரம். இதில் போய், சீர்திருத்தம் செய்வதில் எந்த ஒரு புண்ணியமும் இருப்பதாக எனக்கு தெரியவில்ல்லை.

Subscribe to:
Posts (Atom)