மகளிர் தினம்

ஒன்றே எனக் கொள்வோம் - வகையிரண்டு
என்ற போதிலும் இனமொன்றல்லவோ
தொன்று தொட்ட கேடுகெட்ட எண்ணத்தினை
அகற்றிடுவோம்
பெண்கள் கண்களுமில்லை
பெற்றெடுக்கும் எந்திரமுமில்லை - அவர்களுக்கென
பெருமை பீற்றலும் வேண்டியதில்லை
கருமமென தூற்றவும் தேவையில்லை

அவளும் அவனும் ஒன்றடா!
பிரிப்பு இங்கே ஏதடா?