எவ்வுளவோ யோசிச்சி பார்த்தேன், தலைப்பு ஒன்னும் வைக்க முடியல. நீங்க வேணும்னா ட்ரை பண்ணுங்க!
சில விஷயங்கள் தப்புன்னு தெரிஞ்சும், அந்த தப்ப மீண்டும் செய்ய மனசு துடிக்கும்
கணினியே கடவுள். ஒரு ஆத்திகனின் பார்வையில், எவ்வுளவு தான் சரியாக பேசினாலும், கடைசியாக கடவுள் என்றால்,
1 .நம்மை படைத்தவர்,
2 .நம்மை காக்கின்றவர்,
3 .நாம் வாழ உதவி செய்பவர்,
4 .இறுதியாக, நம்மை அழிப்பவர்.
அந்த கடவுள், இந்த நான்கை மட்டுமே செய்பவராக இருப்பார்!
இன்று, கணினி இந்த நான்கு செயல்களையும் கடவுளை விட சிறப்பாகவே செய்கிறது! எடுத்துக்காட்டு கூற வேண்டியதில்லை என நம்புகிறேன்.
நாத்திகர்களுக்கு: ஆத்திகர்களின் கடவுளின் மேன்மைக்கு ஒப்பாக ஒரு பொருளை கற்பனை செய்துகொள்ளுங்கள். அதனோடு கணினியை ஒப்பிட்டு கொள்ளுங்கள்!
சரி விஷயத்திற்கு வருவோம். Chat online, tickets online, banking online, books online, mail online, dating online, travel online, jobs online, shopping online, gaming online, socialising online, cinema online என அனைத்துமே இன்று online என்று மாறிவிட்டது. போகிற போக்கில் ஆன்லைனில் திருமணம், ஆன்லைனில் கோவில் தரிசனம், ஆன்லைனில் ஹோட்டல் என்று அனைத்துமே மாறினாலும் ஆச்சர்யப்படுவதற்கு இல்லை. நான் சொல்வது சற்று விநோதமாக இருக்கலாம்! நூறு வருடங்களுக்கு முன்பு ஒரு மனிதனிடம்,
"அடேய் மனிதா, வீட்டில் உள்ளபடியே இந்த உலகத்தை ரசிக்கலாம், ருசிக்கலாம், பழகலாம், கற்கலாம், ஏன் கொல்லலாம்" என்று சொன்னால், அவன் "தம்பி, வெய்யில்ல அதிகமா சுத்தாதீங்க, தலைக்கு எலுமிச்சை தேச்சி குளிங்க என்று அட்வைஸ் பண்ண ஆரம்பித்துவிடுவான்"
நாம் கற்பனை செய்து பார்க்க முடியாத அளவிற்கு இன்று இணையத்தின் வளர்ச்சி பரிணமித்து, பரந்து விரிந்து மனித வாழ்வை எளிமையாக்கி விட்டது!குண்டூசி வாங்குவது முதல், கப்பல் வாங்குவது வரை என, அனைத்துமே இன்று கணினிமயமாக்கல் தான்! மூன்று வேளை உணவும், இணையம், கணினியும் இருந்தால் ஒரு குழந்தைக்கு வேறு எதுவும் தேவை இல்லை என்று சொல்லும அளவிற்கு இன்று அதில் உள்ள வளங்கள் பெருகி உள்ளன!
இதில், பின்லாந்து நாட்டில் 98.8% மக்கள் broadband இணைப்பு பெற்றுள்ளனராம்! அந்நாட்டு அரசாங்கம் மக்களுக்கு அத்தியாவசிய தேவைகளாக உணவு, உடை, இருப்பிடம் என்ற வரிசையில் broadband internet connectionஐயும் சேர்த்துள்ளது! நல்ல விஷயம் தான்
நிற்க, அளவிற்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு!
நாம் மனிதர்கள், சமுதாய விலங்குகள்(social animals), social networking-லேயே வாழ்கையை ஓட்டும் அளவிற்கு நாம் இன்னும் செல்லவில்லை! மற்ற உயிரினத்திலிருந்து நம்மை வேறுபடுத்தி காட்டுவதே நம்முடைய சமுதாய பழக்கங்களும், அதை சார்ந்த வழக்கங்களும் தான். இப்படி இணையத்தினால் (அதிலும் குறிப்பாக சமுதாய வலைத்தொடர்பு வலைமனைகள்!, social networking websites) நாம் நம்முடைய தனித்துவத்தையும், அடையாளத்தையும் முற்றிலுமாக இழக்கிறோம் என்பதே உண்மை!
நேரில் பேசி பழகி, ஒருவரை ஒருவர் புரிந்துகொண்ட காலம் போய் இன்று உட்கார்ந்த இடத்திலேயே நிச்சயதார்த்தம் வரை முடித்துவிடுகிறோம்! முற்றிலும், இயந்திரத்தனமாக 15 அங்குல திரையை கண்டு, அது சொல்வதை நம்பி, அதிலேயே லயித்து, ஒரு காலத்தில் அது இல்லாமல் போனால் பைத்தியம் பிடிக்கும் அளவிற்கு அடிமையாகிறான்! மனிதனைப்போன்று ஒரு விசித்ரமான ஜீவராசியை இந்த அண்டத்தில் எங்கும் காணமுடியாது! தான் உருவாக்கிய ஒன்றில் தன்னையே தொலைத்து, மீள வழி இருந்தும், இல்லாதவனாய் தன்னை காட்டிக்கொண்டு, இருட்டறையில் இருந்து தப்பிக்க பல ஜன்னல்கள் இருந்தும், ஏனோ எலிப்பொந்துகளில் நுழைய முற்படுகிறான்!
கண்ணை விற்று, ஓவியம் வாங்குவதா? உன் அடையாளத்தை தொலைத்து மனிதம் செய்கிறாயா?
இது என்ன, அவ்வுளவு பெரிய பிரச்சனையா? ஆம்! அர்ஜென்டீனாவில் ஒரு தாய், தனது 9 மாத குழந்தைக்கு பாலூட்ட மறந்து தொடர்ந்து 13 மணி நேரம், வெளியூர் சென்ற தனது கணவனிடம் முகநூல் (facebook) வழியாக அரட்டை அடித்ததில் பசியால் அந்த குழந்தை இறந்தே போனது!
அவ்வுளவு ஏன், அர்ஜென்டீனாவிற்கு ஏன் செல்கிறீர்கள்? நாம் இந்தியாவில், திரிபுரா மாநிலத்தில் மருத்துவம் பயிலும் 22 வயது மாணவன், யாரோ orkutஇல் அறிமுகமான பெண்ணை இரு வருடம் கணினியிலேயே காதலித்தான்! அவளும் வழக்கம் போல பெப்பே காட்டிவிட்டாள்! விளைவு மருத்துவ கல்லூரி மாணவன் தற்கொலை! சம்பவம் நடைபெற்ற தேதி 5/11/2010 , ஆதாரம் ஹிந்து தினசரி!
இந்த கதைகள் அனைத்தும், சமுதாய தளங்களின் தீங்கு என நினைக்க வேண்டாம்! இவை மனிதனை எந்த அளவிற்கு ஆட்கொண்டு இருக்கிறது என்பதை மட்டும் காண்க!
மனிதத்தின் தனித்துவத்தை இழந்து, இப்படி கேவலமான வாழ்க்கை வாழ்ந்துகொண்டிருக்கிறோம்! இந்த கேவலத்தை நிகழ்த்த தெரிந்திருந்தால், அவர்கள் அறிவாளிகள், hi-tech ஆக வாழ்பவர்கள்! தெரியாதெனின் அவர்கள் முட்டாள்கள்!
ஆக, சமுதாய வலைமனைகளால் நமக்கு எள்ளளவு நன்மை ஏற்படினும், புகழ்வோம்! மலையளவு தீமை ஏற்படினும், இகழோம்! நாம் அவற்றை விட்டுக்கொடுக்க போவதும் இல்லை! எது நடந்தாலும் நானும் facebookil கட்டுரைகளையும், கதைகளையும் வெளியிடாமல் இருக்கபோவது இல்லை! நீங்களும் அதை படிக்காமல் இருக்கபோவதும் இல்லை!